2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கழுத்துவரை மண்ணில் புதைந்து வயோதிபர் ஆர்ப்பட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 26 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நிர்மாணிப்பாளர்களுக்கு எதிராக நபரொருவர் தனது உடலின் கழுத்து பகுதி வரை மண்ணில் புதைத்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் வசித்துவரும் சோ ஹெய்ஜி என்ற 62 வயதுடைய நபரே இவ்வாறான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது கிராமத்தில், 4000இற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வன பரப்பளவை அதிகரித்து வந்துவர் இவர்.

இவரிடம் வீட்டுத்தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்காக மேற்படி நிலத்தை பயன்படுத்த சிலர் கேட்டப்போது மேற்படி வயோதிபர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

'நான் 30 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்த மரங்களை ஒரே இரவில் வெட்டி வீழ்த்திவிட்டனர். என்னுடைய முயற்சிகள் பாழாகிவிட்டன' என அவர் விபரித்துள்ளார்.

தனது முயற்சியில் உருவாக்கப்பட்ட வனப் பகுதியானது அழிக்கப்பட்டதாக கூறி அவர் தனது உடலின் கழுத்து வரையான பகுதியை நிலத்தினுள் புதைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி காணியானது தனது காணியென அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் வரை தான் அவ்விடத்திலிருந்து அகலபோவதில்லையென அவர் உறுதியழித்துள்ளார்.

'எனது கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் நான் பல வாரங்கள் இங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எனக்கு தேவையேற்பட்டால் நான் மீண்டும் இங்கு வருவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .