2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கணவரின் காதலியை தாக்கிவிட்டு அம்பியூலன்ஸுக்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த பெண்

Super User   / 2012 ஜூன் 30 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவரின் காதலியையும் அப்பெண்ணின் குழந்தையும் வாகனத்தால் மோதி தாக்கிய பெண்ணொருவர், காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஷான்டோன் மாகாணத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான, ஸாங் ஷிஹ் (38) எனும் இப்பெண், தனது கணவரின் காதலி என சந்தேகிக்கப்பட்ட அயலவரான பெண்ணையும் அப்பெண்ணின் 4 வயது மகளையும் வாகனத்தில் மோதி காயப்படுத்தினார்.

காயமடைந்த தாய்க்கும் மகளுக்கும் எவரும் உதவி செய்ய முடியாதவாறு அப்பெண் குறுக்காக நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பியூலன்ஸ் வாகனமொன்று அங்கு விரைந்தபோது  வாகனத்தை நகர விடாமல் தடுப்பதற்காக, அப்பெண் தனது ஆடைகளை களைந்துவிட்டு அவ்வாகனத்திற்கு குறுக்காக தரையில் படுத்துக்கொண்டார்.

மேற்படி குழந்தைக்குக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவ ஊழியர் ஒருவரை அப்பெண் தாக்கியதால் அந்நபர் குழந்தை கீழே வீழ்ந்தது. பின்னர் அக்குழந்தை காயம் காரணமாக உயிரிழந்தது.

பின்னர் ஆயுதமேந்திய பொலிஸார் அப்பெண்ணை கைது செய்தனர். அவர் ஆரம்பப் பாடசாலையொன்றின் ஆசிரியை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .