2025 மே 14, புதன்கிழமை

நீச்சலுடையுடன் துப்பாக்கி ஏந்திய பெண் சிப்பாய்

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இஸ்ரேலிய இராணுவ வீராங்கனையொருவர் நீச்சலுடையுடன் துப்பாக்கியை தோளில் சுமந்தவாறு காணப்படும் புகைப்படமொன்று இணையத்தளங்களில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தலைநகர் டெல்அவிவிலுள்ள கடற்கரையில் இப்புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலுள்ள பலருக்கு மத்தியில் நீச்சலுடையுடன் துப்பாக்கி ஏந்தியவாறு அவர் காணப்படுகிறார்.

'இஸ்ரேலில் மட்டும்' என தலைப்பிட்டு  பேஸ்புக்கில் அப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீராங்கனை அமைதியான கடற்ரையில் ஏன் துப்பாக்கியை ஏந்தியவாறு  காணப்படுகிறாள்  என பலர்  குழப்பமடைந்துள்ளனர்.

ஆனால் இதற்கு நடைமுறை ரீதியான காரணங்கள் இருக்கலாம் என வேறு சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவ ஒழுங்குவிதிகளின்படி, முகாமிலிருந்து ஆயுதங்களை வெளியே எடுத்துச் செல்பவர்கள் அவற்றை எப்பபோதும் தம்முடன் வைத்திருக்க வேண்டும். ஆயுதங்களை தொலைத்தால் இராணுவ சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இதனால் நீச்சலுடையுடன் கடற்கரைக்கு வந்தபோதிலும் தனது துப்பாக்கியையும் அவர் பாதுகாப்பாக தன்னுடன் வைத்திருக்க தீர்மானித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இஸ்ரேலில் பெண்கள் அனைவரும் இரண்டு வருடகாலம் இராணுவத்தில் கடமையாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X