2025 மே 14, புதன்கிழமை

நிர்வாண படங்களை அனுப்புமாறு சிறுமிகளை கோரிய பாடகர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயது குறைந்த பெண் ரசிகைகளிடமிருந்த நிர்வாண புகைப்படங்களையும் ஆபாச வீடீயோக்களையும் அனுப்புமாறு கோரிய பாடகரொருவர் நியூயோர்க்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மைக்கல் லெம்பார்டோ என்ற 23 வயது நபரே இவ்வாறு ரோமில் உள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 7 மாதங்காளாக மேற்கொள்ளப்பட்ட குற்றப்புலனாய்வு விசாரணைகளை தொடரந்து மேற்படி இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விளைஞன் 14 வயதுடைய ரசிகையிடம் அவளது நிர்வாண புகைப்படங்களையும் வீடீயோக்களையும் அனுப்பி வைக்குமாறு ஸ்கைப் ஊடாக கூறியுள்ளதுடன் 16 வயது சிறுமியிடம் வீடியோவில் ஆடைகளை களைந்து தோன்றுமாறு கூறியுள்ளார்.

இவ்விளைஞனின் வீட்டை கடந்த ஜனவரி மாதம் சோதனையிட்டபோது  அவரது மடிக்கணினியிலிருந்து 51 நிமிடம் நிறைந்த நிர்வாண காட்சிகள் அடங்கிய வீடீயோ கண்டறியப்பட்டது.

இருவரும் ஒரு தொகை படங்களை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டதாக 16 வயதான சிறுமி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மேற்படி சிறுமி தயங்கியிருந்தாலும் பின்னர் நிர்வாண புகைப்படங்களை மேற்படி இளைஞனுக்கு அனுப்பிய விடயம் தொலைபேசியினூடாக கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞன் 5 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி இளைஞன் இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கும் 18 வயதுக்கு குறைந்தோருடன் தொடர்புகொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

இவ்விளைஞன் குற்றவாளியாக காணப்பட்டால் 30 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாமென தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X