2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காட்டெருமைக்கு உரிமையாளர் யார்? சீனாவில் சர்ச்சை

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நகரமொன்றில் மோட்டார் சைக்கிளோட்டியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கு காரணமான மாட்டை கண்டறிவதற்கு பொலிஸார் சன்மானம் அறிவித்ததால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் தென்பிராந்தியமான கோங்டோங் மாகாணத்தில் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில்  சென்றுகொண்டிருந்தபோது அவர்மீது மாடொன்று மோதியதால்  அந்த  நபர் உயிரிழந்தார். அம்மாடு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

அன் லோ எனும் மேற்படி நபரின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அந்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்குத் தொடர தீர்மானித்தனர். இதனால் மாட்டை இனங்காண உதவுபவர்களுக்கு சன்மானம் வழங்கத் தயார் என பொலிஸார் அறிவித்தனர்.

எனினும் ஹு ஷிபி எனும் மற்றொரு பெண், எருமையொன்றை கொண்டுவந்து அந்த எருமையே  அன் லோவின் மீது மோதியதாக தெரிவித்தார்.
ஆனால் அது ஒரு காட்டெருமையாகும்.  ஹு ஷிபிக்கு மேற்படி சன்மானத்தை வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தனர்.  இதனால் பொலிஸார் மீது ஹு ஷிபி குறை கூறுகிறார்.

காட்டெருமைக்கு உரிமையாளர் யாரும் இல்லாததால் சன்மானத்தை வழங்க பொலிஸார் மறுக்கின்றனர் என அப்பெண் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் மேற்படி பெண்ணின் கருத்தை நிராகரித்த பொலிஸ் பேச்சாளர், 'இந்த எருமைதான் அன் லோவின் மீது மோதியது என்பற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதனால் இதற்கான வெகுமதியை அந்த பெண்ணுக்கு கொடுக்க நாம் தயாராக இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஹு சிபி கூறுகையில், 'நான் கையுடன் செல்லமாட்டேன். நான் அதனை கொன்று இறைச்சியை விற்பனை செய்வதன் மூலம், நான் இழந்த பணத்தை பெற்றுக்கொள்வேன்'  எனத் தெரிவித்துள்ளார்;.



  Comments - 0

  • jam Friday, 03 August 2012 08:36 AM

    எருமைச்சிந்தனை.

    Reply : 0       0

    jan Friday, 03 August 2012 06:29 PM

    ஹுசிபி எருமை வாங்கிய பணத்தை பெற்றுக்கொள்ள இதைவிட புத்திசாலிதனம் இல்லை. அது மனிதனல்ல மிருகசாதி மதிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .