2025 மே 14, புதன்கிழமை

காதலிக்கு ஆச்சரியமளிப்பதற்காக தன்னைத்தானே தபாலில் அனுப்பிய நபர்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவைச் சேர்ந்த நபரொருவர் தனது காதலிக்கு ஆச்சரியமளிப்பதற்காக காதலியின் விலாசத்திற்கு தன்னைத்தானே அஞ்சலில் அனுப்பி விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார்.

சீனாவின் தென்பிராந்தியாமான சோங்கிங் நகரை சேர்ந்த ஹு செங் என்பவர் தன்னை கார்ட்போர்ட் பெட்டியொன்றினுள் அடைத்து காதலியின் விலாசத்திற்கு தனியார் அஞ்சல் சேவையொன்றின் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார்.

ஹூ செங் பெட்டியொன்றினுள் தன்னை முடக்கிக் கொண்ட நிலையில் நண்பர் ஒருவரைக் கொண்டு பெட்டியை டேப் ஒட்டி அடைத்து அஞ்சல் நிலையத்தில் ஒப்டைக்கச் செய்தார். பெட்டியை திறக்கும்போது காதலியின் பிரதிபலிப்பை பதிவுசெய்வதற்காக மற்றொரு நண்பர் கமெராவுடன் காதலியின் வீட்டில் காத்திருந்தார்.

ஆனால், ஹு செங்கின் காதலியின் முகவரியை கண்டுபிடிக்க அஞ்சல் சேவை நிறுவனத்தினர் தாமதித்தால் அவர் 3 மணித்தியாலங்கள் பெட்டிக்குள் பரிதவித்துக்கிடந்துள்ளார். அரை மணித்தியாலங்கள் மாத்திரமே தான் பெட்டிக்குள் இருக்க நேரிடும் என எதிர்பார்த்த அவர் மூன்று மணித்தியாலங்கள் அடைப்பட்டுக் கிடந்தார்.

நான் அந்த காட்போட் பெட்டியில் ஒரு துளையை இடுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் அது மிகவும் தடித்த அட்டையாக காணப்பட்டது. மேலும் எனது காதலிக்கு கொடுக்க விரும்பிய ஆச்சர்யத்தை நான் சத்தமிடுவதன் மூலம் சீர்குலைக்க விரும்பவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதியில் பெட்டி திறக்கப்பட்டபோது ஹு செங் ஏறத்தாழ மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவர்கள் பரிசோதிக்க நேரிட்டது.

'ஆரம்பத்திலே இவர் இதனை செய்யப்போவதாக அறிவித்திருந்தால் நிச்சயம் இந்த பெட்டியை நாங்கள் பொறுப்பேற்றிருக்க மாட்டோம்' என அஞ்சல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'விலங்குகளை கூட விசேட கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்தால் மாத்திரம்தான் நாம் ஏற்றுக்கொள்கிறோம். அப்போதுதான் அவற்றினால் சுவாசிக்கமுடியும்' என அப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X