2025 மே 14, புதன்கிழமை

உள்ளாடைக்குள் மறைத்து தேவாங்கு குட்டிகளை கடத்தியவர்கள் கைது

Kogilavani   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவாங்கு குட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு கொண்டுச்செல்ல முற்பட்ட மூன்று நபர்களை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டுபாயில் இருந்து பாங்காங் செல்லும் விமானத்தில் பயணம் செய்த மூன்று நபர்கள் 7 அங்குல நீளமுள்ள இரண்டு தேவாங்கு குட்டிகளை ஒரு பொலிதின் பையினுள் இட்டு தங்களின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்துள்ளனர்.

விமானம் தரை டெல்லியில் தரை இறங்கியபோது குறிப்பிட்ட நபர்களை சோதனை செய்த பொலிஸார்; அவர்களிடம் இருந்த தேவாங்கு குட்டிகளை கைப்பற்றியதுடன் மேற்படி நபர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த தேவாங்கு குட்டிகள் விலங்குகள் காப்பகத்தில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் தேவாங்கு குட்டிகள் அதிகம் வசிக்கின்றன. இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாங்குகள் அரிதானவை. இந்தோனேசியா தேவாங்குகளுக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால் அவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. மேலும் இந்த விலங்குகள் பற்களுக்காகவும், தோலுக்காகவும் தற்போது கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X