2025 மே 14, புதன்கிழமை

ஆதாம் ஏவாள் கேலிச்சித்திரத்தை ஆபாசம் எனக்கூறி அகற்றிய பேஸ்புக்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஞ்சிகையொன்றில் வரையப்பட்ட ஆதாம் ஏவாள் கேலிச்சித்திரத்தில் ஏவாலின் உருவமானது மார்பகம் வெளித்தெரியும் வகையில் வரையப்பட்டதாகக்கூறி, பேஸ்புக் இணையத்தளமானது அதனை தடைசெய்துள்ளது.

நியூயோர்க்கை சேர்ந்த கேலிச்சித்திர கலைஞர் ஒருவரினால் 'ஆதாம் ஏவாள்' எனும் சஞ்சிகையொன்றிற்காக வரையப்பட்ட மேற்படி சித்திரமானது பேஸ்புக் இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஈடன் தோட்டத்தில் உள்ள மரத்தின் கீழ் ஆதாம் ஏவாள்; ஓய்வெடுப்பதை சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.

இச்சித்திரம் கடந்த 31 ஆம் திகதி ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,  பாலியல் படங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பிலான ஃபேஸ்புக் இணையத்தளத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் மேற்படி வரைப்படம் காணப்பட்டதாக கூறி அப்படத்தினை ஃபேஸ்புக் வலைத்தளம் நீக்கியுள்ளது.

பேஸ்புக் விதிமுறைகளின்படி, பெண்களின் அந்தரங்க உடற்பாகங்கள் தெரியும் எந்த படமும் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆதாம் ஏவாள் தொடர்பான இந்த ஓவியத்தை அகற்றியமை நகைப்புக்குரியது என அச்சஞ்சிகையின் ஆசிரியர் மன்கொவ் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X