2025 மே 14, புதன்கிழமை

வீதியில் சென்ற பெண்களை கடித்த நிர்வாண நபர்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாணக் கோலத்தில் இரத்தம் தோய்ந்த உடலுடன் திடீரென தோன்றி, வீதியில் சென்ற பெண்களின் தலைகளை  கடித்ததாக  அமெரிக்க இளைஞன் ஒருவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் சிமினோ என்ற 20 வயது இளைஞனே இவ்வாறு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

இவ்விளைஞன் மிருகங்களைபோன்று உரத்து சத்தமிட்டதுடன் தங்களது தலைகளை கடித்ததாக இரு பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இப்பெண்களில் ஒருவர் குறித்த இளைஞனின் தாக்குதலில் இருந்து காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பின் அவர் ஒரு வீட்டிற்குகள் புகமுயன்ற போது அவ்வீட்டு இருந்தவர் சிமினோவை விரட்டியடித்தார்.

பின்பு சிமினோ ஆட்களற்ற மற்றொரு வீட்டுக்குள் சென்று தனது ஆடைகளை கழற்றி எறிந்தார். பின்பு வீட்டின் மேல் மாடிக்கு சென்றதுடன் அங்கிருந்து வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்து இரண்டு பெண்கள் மீது தாவியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

"மேற்படி இளைஞனின் உடல் இரத்தத்தினால் தோய்ந்திருந்ததுடன் அவன் மிருகத்தை போன்ற சத்தத்துடன் எனது தலையை காயப்படுத்தினான்" என பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியமை, பொது இடத்தில் அநாகரிகமாக தோன்றியமை, அத்துமீறல் உட்பட பல குற்றச்சாட்டுகளை சிமினோ எதிர்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X