2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலகின் மிக குள்ளமான சிறுமி பாடசாலை செல்கிறாள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் மிகவும் குள்ளமான சிறுமியாக கருதப்படும் 68 சென்றிமீற்றர் உயரமான சிறுமி, முன்பள்ளி கல்வியை கடந்தவாரம் ஆரம்பித்துள்ளாள்.
சார்லெட் எனும் 5 வயதுடைய இச்சிறுமி 68 சென்றி மீற்றர் உயரத்துடனும் 9 இறாத்தல் நிறையுடனும் காணப்படுகின்றார்.

இவர் கடந்த வாரம்  தனது வயதையுடைய சிறுவர்கள் கல்விக் கற்கும் பாடசாலையில் இணைந்து கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் பெற்றோரான ஸ்கொட் காரிஸிட் மற்றும் எம்மா நிவ்மோன் ஆகியோர் தனது பிள்ளை பாடசாலையில் இணைந்துக்கொண்ட நாளை ஒரு மைல்கல்லாக கருதுகின்றனர். அவர்கள் முடிந்தவரை தனது பிள்ளைக்கு சாதாரண வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு போராடிய வண்ணமுள்ளனர்.

'உடல்நலக் குறைப்பாடுகளுடன் உள்ள பல மில்லியன் கணக்கான குழந்தைகளில் சார்லட்டும் ஒருவர். குடும்ப பாரம்பரியத்தை அவதானிக்கும்போது அவர் குறைப்பாடுடைய பிள்ளையில்லை' என எம்மா (30) தெரிவித்துள்ளார்.

'அவள் மிகவும் சிறியவளாக இருக்கலாம். ஆனால் அவளிடம் ஆளுமை உள்ளது. 5 வயது சிறுமிக்கு தேவையான அனைத்து விடயங்களும் அவளுக்கும் தேவைப்படுகின்றது' என அவர் கூறினார்.

மேற்படி சிறுமி பிறக்கும்போது 2 இறாத்தலுக்கும் குறைவான நிறையுடையவளாகவே காணப்பட்டாள். 25 சென்றிமீற்றர் உயரத்தைக் கொண்டிருந்த அவள் பொம்மைகள் அணியும் ஆடைகளையே  அணிந்திருந்தாள்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .