2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரயிலில் பயணிகள் முன்னிலையில் சிறுநீர் கழித்ததுடன் குளியலையும் மேற்கொண்ட பெண்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரயிலில் பயணம் செய்த பெண்ணொருவர் பயணிகள் முன்னிலையில் சிறுநீர் கழித்தது மட்டுமல்லாமல் சிறு குளியலையும் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நிவ்யோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணின் இத்தகைய காட்சிகள் அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகள் அதிகமிருந்த ரயிலில் இப்பெண் சிறுநீர் கழிப்பதற்காக தடுமாறுவதும் பின் பயணிகளுக்கு முன் சிறுநீர் கழிப்பதுமான காட்சிகள் மேற்படி வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதனை அவதானித்த சில பயணிகள் அவ்விடத்திலிருந்து அகன்று செல்ல குறித்த பெண் தனது பையிலிருந்து நீர்நீறைக்கப்பட் கலனொன்றை எடுத்து சிறு குளியலை மேற்கொள்கின்றார்.

இதன்போது, இளஞ்சிவப்பு  நிறத்திலான ஸ்பொஞ்ஞை நீறில் நனைத்து தனது உடலில் தேய்ப்பதும் பின்பு வாசனைத்திறவியங்களை பூசிக்கொள்வதுமான காட்சிகளும் இவ்வீடீயோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன

'எனக்கு தெரியும், மக்கள் அறியாமை நிறைந்தவர்கள்' என அப்பெண் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .