2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிர்வாணக்கோலத்தில் புதிய சாதனை படைக்கும் முயற்சி தோல்வி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூற்றுக்கணக்கானோர்  இணைந்து நிர்வாண கோலத்தில் நீந்துவதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பிரிட்டனின் நோர்த்தம்லன்ட் கடலில் இச்சாதனை நிலைநாட்டப்படவிருந்தது.  மிகவும் குளிரான காலநிலையில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் நிர்வாணமாக நீந்தினர்.

மனநல தொண்டு நிறுவனமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், புதிய உலக சாதனை முயற்சி தோல்வியுற்றுள்ளது.

புதிய சாதனைக்கு தேவையான எண்ணிக்கையோனோர் இந்நிகழ்வில் பங்குபற்றாமையே இதற்கான காரணமாகும். பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் 400 இற்கும் அதிகமானோர் நிர்வாணமாக நீச்சலில் ஈடுபட்டமையே தற்போது உலக சாதனையாக உள்ளது.

  Comments - 0

  • tamilan Friday, 28 September 2012 08:24 AM

    இது சாதனை அல்ல வேதனை

    Reply : 0       0

    Muhammadh Aadhil Monday, 22 October 2012 06:20 AM

    றூம் போட்டு யோசிப்பாங்களோ...!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .