2025 மே 14, புதன்கிழமை

சோபா கதிரையுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் கைது

Kogilavani   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலொன்றில் பணிபுரிபவரான ஜிராட் ஸ்ரெட்டர் என்ற 46 வயதுடைய நபரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இரவு 11 மணியளவில் கடமையிலிருந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர், மேற்படி நபரின் நடத்தையை கண்டு, சத்திமிட்டபோது அந்நபர் தப்பியோடியுள்ளார்.

பின்னர், மேற்படி நபர் கீழ்த்தரமான, ஒழுக்கமற்ற செயற்பாட்டை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்டால், சுமார் 9 மாதங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X