2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில் செய்துக்கொண்டே சடங்கு சம்பிரதாயத்துடன் திருமணம் செய்துக்கொண்ட பெண்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணம் செய்துக்கொள்ளவிருந்த நாளில் அதிகாரிகள் விடுமுறை வழங்க மறுத்ததால் பெண்ணொருவர் தனது திருமண நாளான்று தொழிலுக்கு வந்து மதிய நேர இடைவேளையின் போது திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் சான்டொங் மாகாணத்திலுள்ள பெருந்தெரு ஒன்றில், கட்டணம் அறவிடப்படும் மையத்தின் முகாமையாளராக தொழில்புரியும் சாங் யூ என்ற பெண்ணே இவ்வாறு வீதி திருமணத்தை மேற்கொண்டுள்ளார்.

சீனாவில் சந்திரன் கொண்டாட்ட விடுமுறையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தமது ஊர்களுக்கு திரும்பியதால் வீதிகளில் வாகன நெரிசல் அதிகமானது. இதனை கருத்தில் கொண்டு சாங் யூவின் திருமண விடுமுறை அதிகாரிகளால் இரத்து செய்யப்பட்டது.

இதனால், தனது திருமண நாளன்று வேலைக்கு வந்த சாங் யூ மதிய நேர உணவு இடைவேளையின்போது தனது திருமண ஊர்வல வாகனங்கள் கட்டணம் அறவிடும் இடத்துக்கு வந்த நிலையில் திருமண ஆடையை அணிந்து திருமண சடங்கை முடித்துக்கொண்டார்.

'இந்த வாரமானது ஒவ்வொருவருக்கும் நெருக்கடியான வாரம். ஆதனால், நான் என்னோடு தொழில்புரிவர்களை கைவிட விரும்பவில்லை' என அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .