2025 மே 14, புதன்கிழமை

கடையொன்றின் கழிப்பறையில் உறங்கிய பெண் தீயணைப்பு பிரிவினரினால் மீட்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடையொன்றின் கழிப்பறையில் உறங்கிய பெண்ணொருவர் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனில் புரோட் நகரில் உள்ள பிஎச்எஸ் என்ற கடைக்கு சென்ற 39 வயதுடைய பெண்ணொருவரே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார். 

கடை அடைக்கப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களின் முன்பே அவர் உறக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார்.

அதர்ச்சியுற்ற அவர், தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் வெளியேற முயன்று ஜன்னலின் வழியாக அவசர சமிக்ஞையை தேடியுள்ளார். அவசர சமிக்ஞை அங்கு காணப்படாததால் சங்கடத்திற்குள்ளான மேற்படி பெண் அவ்வழியாக சென்றவர்களிடம் தனது நிலையை தெரிவித்துள்ளதுடன் அவர்களினூடாக தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 நிமிடத்தின் பின் மேற்படி பெண் மீடகப்பட்டுள்ளார்.

'அவர் உடல் நலக் குறைப்பாட்டுடன் காணப்பட்டதுடன் இச்சம்பவத்திற்காக வருத்தமடைந்தார்' என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் பொலிஸாரின் உதவியுடன் அவரது வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X