2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செல்லப்பிராணிக்காக தேனிலவை ரத்து செய்த தம்பதி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக திருமணமான தம்பதியொன்று, 1,518,550  இலங்கை ரூபா பெறுமதியில் ஏற்பாடு செய்திருந்த தேனிலவை செல்லப்பிராணியின் உயிரை காப்பாற்றுவதற்காக ரத்து செய்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் மொரிஸ்டன் பகுதியை சேர்ந்த கிலெய்ரி (வயது 26) மற்றும் கெரி மோர்கன் (வயது 36) ஆகியோரே இவ்வாறு செல்லப்பிராணிக்காக தமது தேனிலவை இரத்து செய்துள்ளனர்.

மேற்படி தம்பதி அமெரிக்க ரகத்தைச் சேர்ந்த டீடோ என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர். இந்நாயின் தோல்பட்டையில் ஏற்பட்ட புற்றுநோய்க் காரணமாக அதனது வலது கால் துண்டிக்கபட்டது.

இந்நிலையில், மேற்படி செல்லப்பிராணியை குணப்படுத்துவதற்காக இத்தம்பதியினர் இலங்கை ரூபாபடி 1,518,550  செலவில் தேனிலவு இரத்து செய்துள்ளனர்.

'நாங்கள் தேனிலவு கனவை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அதற்கு முன் எமது செல்லப்பிராணியான டீடோவின் நிலையே எமது ஞாபகத்தில் வந்தது. 

அது மிகவும் விசேடமான நாய். நாங்கள் அதனது சத்தரசிகிச்சைக்கான கட்டணங்களை செலவிடுவதற்கு எந்த தயக்கமும் காட்டவில்லை' என மொரிஸ்டன் தெரிவித்துள்ளார்.

'டீடோவின் மருத்துவ செலவுகளுக்கு பணம் செலவிடுவது ஒரு பெரிய விடயமில்லையென நாங்கள் மிருக வைத்தியரிடம் தெரிவித்தோம். எப்படியாயினும் எமது நாயை குணப்படுத்திக்கொள்ள வேண்டும்' என மோர்கன் தெரிவித்துள்ளார்.

'நாங்களன் டீடோவை குணப்படுத்திக்கொண்டால் வேறு ஒரு தினதை தேனிலவுக்காக செலவிடமுடியும். டீடோ நீண்ட காலம் வாழவேண்டும் என்பதே எமது எண்ணம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .