2025 மே 14, புதன்கிழமை

கர்ப்பிணிகளின் விநோத ஆசை....

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு பல்வேறு ஆசைகள் ஏற்படும். அதில் சிலர் விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வர். இன்னும் சிலர் புத்தகங்களை வாசித்து மகிழ்வர்.  

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு விநோத ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர்களது ஆசை அவர்களை மட்டுமன்றி பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பல கர்ப்பிணிப் பெண்கள் தமது வயிற்றுப் பகுதியில் ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.

கடந்த வருடம் மெரய் கெரி என்ற கர்ப்பிணி பெண்ணொருவர் தனது வயிற்றில் ஓவியங்களை வரைந்து பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார். இவர் தனது வயிற்றுப் பகுதியில் வண்ணத்துப் பூச்சிகளை வரைந்திருந்து பலரை கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வருடம் பல கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு இணைந்து தமது வயிற்றில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

கர்பிணிப் பெண்களின் வயிற்றின் மேற்பகுதியில் சிறந்த ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் அவுஸ்டன் பகுதியை தலைமையாக கொண்டு இயங்கி வரும் உடலில் ஓவியம் வரைபவரான வொனிதா பெரி என்பவர் தெரிவித்துள்ளார்.

இவரே கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் ஓவியங்களை வரைந்துள்ளார்.

வயிற்றின் வெளிப்புற தோற்றத்திற்கு ஓவியங்களை பெரிதாக்கி வரைவதற்ககு  3 முதல் 5 மணித்தியாலங்கள் எடுத்தன. இவ் ஓவியங்களை வரைந்ததற்காக அவர், 89,193 இலங்கை ரூபாயை வருமானமாக பெற்றுள்ளார்.

அதிகமான பெண்கள் தமது முகத்தோற்றத்தை வரைவதையே அதிகம் விரும்பியுள்ளனர்.








You May Also Like

  Comments - 0

  • JAN Tuesday, 16 October 2012 01:31 PM

    "அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அ(ப்பயிரான)து உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை." அல் குர்ஆன் 57:20 ; மெலும் பர்க்க: http://www.tamililquran.com

    Reply : 0       0

    binth iss Wednesday, 24 October 2012 06:45 AM

    ஆசைகள் பலவிதம்... அதில் இதுவும் ஒரு விதம்... ஏதோ பிள்ளைக்கு கடைசி வரைக்கும் தாயா இருந்தா சரிதான்...

    Reply : 0       0

    shiny Saturday, 01 December 2012 08:29 AM

    ரொம்ப நியாயமான ஆசதான் .

    Reply : 0       0

    shiny Saturday, 01 December 2012 08:30 AM

    சரியா சொன்னிக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X