2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மதுவிற்காக மனைவியை விற்ற கணவன்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வருடங்கள் அந்நியோன்யமாக பழகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் தனது மனைவியை மது அருந்துவதற்காக ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்கு முயன்ற சம்பவமொன்று ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

மல்யாலா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு தனது மனைவியான 32 வயதுடைய அம்மாயி என்பவரை விற்க முயன்றுள்ளார். அவருக்கு எதிராக பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான மேற்படி நபர் தனது மனைவியை விற்றுவிடத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் இடைத்தரகரிடம் பேசி வேறொரு ஊருக்கு அனுப்பிவைபத்தற்காக பஸ் தரிப்பிடத்திற்கு தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

பஸ் தரிப்பிடத்தில் வைத்து மனைவியின் மீது அன்பு வார்த்தைகளை பொழிந்த கணவர் நடந்தவற்றை தெளிவுப்படுத்தி பஸ் பற்றுச்சீட்டையும் கொடுத்து தரகருக்காக காத்திருக்குமாறு கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டார்.

கணவரின் நடவடிக்கையை கண்டு அதர்ச்சிடைந்த மேற்படி பெண் அங்கிருந்து உறவினர் வீடொன்றிற்க்கு சென்று தனது 15 வயது மகனுக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்தே பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். மேற்படி தம்பதியினருக்கு 15, 12 வயதுகளில்  கார்த்திக், அபிஷேக் என்ற இரு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • M.sampanther Friday, 19 October 2012 06:50 AM

    Ilangai .ulagam azivai noakkip pookiradu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .