2025 மே 14, புதன்கிழமை

மனிதரைப் போல் ஒலியெழுப்பும் பெலுகா

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் திமிங்கிலங்கள் தொடர்பில் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பயனாக, பெலுகா வகை திமிங்கிலங்கள் மனிதர்களைப் போன்று சத்தமிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் குரல்வளையைப் போன்று அதன் அமைப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக டொல்பின் வகை மீன்களை மனிதர்களைப் போன்று பயிற்சிகளை வழங்கி மிமிக்ரி செய்யப் பயன்படுத்துவது உண்டு.

ஆனால் என்.ஓ.சி. எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த திமிங்கிலம் வாய் மூடிய நிலையில் மெதுவாக மனிதர்களைப் போன்று சத்தமிடுவதாக கூறியுள்ளனர்.
 
மனிதர்கள் சத்தத்தை ஞாபகம் வைத்து அதுபோன்று பேசுவதற்கு அவைகள் தனது குரல்வளை அமைப்புகளை மாற்றுவதாகவும் அவர்கள் கூறினர்.

பேசுவதற்கு ஏதுவான அமைப்பை பெற்றுள்ள இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மிமிக்ரி செய்யப்பழக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X