2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கழுத்தை நெரித்த காதலனின் விரலை கடித்து துப்பிய காதலி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளைகளின் முன்பாக தனது கழுத்தை நெரிக்க முயன்ற காதலனின் விரலை பெண்ணொருவர் கடித்து துப்பிய சம்பவமொன்று அமெரிக்காவின் சிகாககோ நகரில் இடம்பெற்றுள்ளது.

ஜெர்ரி ஸ்டீவன்சன் என்ற 38 வயது நபரே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி நபருக்கும் 45 வயதுடைய அவரது காதிலிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியபோது ஒருக் கட்டத்தில் ஜெர்ரி தனது கைத்துப்பாக்கியால் காதலியை மிரட்டிவிட்டு தனது காதலி கூச்சலிடுவதை தடுக்கும் வகையில் ஒரு கையால் அவரது வாயை பொத்திக்கொண்டு மறுகையால் கழுத்தை நெரித்துள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் மிரண்டுபோன பெண் காதலனின் விரலை கடித்து துப்பிவிட்டார். இதனால் அலறித் துடித்த ஜெர்ரி, துண்டாகிப் போன விரலுடன் வைத்தியசாலைக்கு விரைந்துள்ளார். வைத்தியர்கள் அறுவை சிகிச்சையினூடக அந்நபரின் விரலை மீண்டும் ஒட்ட வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் ஜெர்ரி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தற்காப்புக்காக மேற்படி நபரின் விரலை அவரது காதலி கடித்து துண்டாக்கியதால் அப் பெண்  மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .