2025 ஜூன் 12, வியாழக்கிழமை

குழந்தைகளை பளுதூக்கியாக பயன்படுத்தும் தாய்

Kanagaraj   / 2014 மே 14 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


உடற்பயிற்சியின் போது, பளுதூக்கிக்கு பதிலாக தனது குழந்தைகளை பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் தாயொருவர் தொடர்பில்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
லண்டனின் புறநகரான டாகன்ஹாமில் வசிக்கும் மியா வாரிவிக் (வயது 44) எனும் தாயொருவரே இவ்வாறான புதிய வழிமுறையைப் பின்பற்றி உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர், 7 வயதுடைய இவண் மற்றும் 5 வயதுடைய ஜெஸ்மின் என்ற அவரது குழந்தைகளை தனது உடற்பயிற்சிகளுக்காக பயன்படுத்துகின்றாராம். 20 வயதிலிருந்தே பளுத்தூக்கும் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள இந்தப் பெண், பல்வேறு போட்டிகளிலும் பங்குபற்றி உள்ளார்.

தனது குழந்தை ஜெஸ்மின் 2008ஆம் ஆண்டு பிறந்ததற்கு பின்னர் தனது உடல்  எடை மற்றும் வடிவம் மாற்றமடைந்ததால் வீட்டில் இருந்தவாறே தனது குழந்தைகளை பயிற்சிக்கு பயன்படுத்துகின்றாராம்.

முழு நேரமும் தனது நேரத்தை குழந்தைகளுடன் கழித்துக்கொண்டு தனது உடலையும் அழகாக வைத்துக்கொள்வது தனக்கு மகிழ்ச்சியூட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைச்சுற்றி ஓடுவேன். அவ்வாறு ஓடும் போது குழந்தைகளுக்கு மிகவும் குதூகலமாக இருக்கும். எனது குழந்தைகள் தான் என்னை பயிற்றுவிக்கின்றனர்.

எனது கணவர் டொம் (வயது 50) ஒரு ரக்பி வீரர். அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார். நான் அவரை உடற்பயிற்சி செய்யும் வகுப்பிலேயே சந்தித்தேன்.

எனக்கென்று ஒரு துணையை தேடிக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. காரணம் நான், என்னை விடவும் உறுதியான உடல் கொண்டவராக எனது கணவர் இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். அதனாலேயே டொம்மை எனது கணவராக தேரந்தெடுத்தேன் என்று அப்பெண் கூறியுள்ளார்.

இந்த பெண், இம்முறை நடைபெறவிருக்கும் தேசிய தன்னார்வ உடற்பயிற்சி போட்டியின் இறுதிகட்டத்தில் பங்கேற்கவுள்ளாராம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13