2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மறுஜென்ம வாழ்வில் சித்திரவதை: தொலைபேசியில் உணர்த்திய மூதாட்டி

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


இறந்து போன தனது பாட்டி மறுஜென்ம வாழ்க்கையில் தான் சித்தரவதைக்குள்ளாவதை தொலைபேசியில் படம்பிடித்து அனுப்பியுள்ளதாக பெண்ணொருவர் அதரச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ருமெனியா, தென்கிழக்கு பகுதிக்குட்பட்ட  ஸ்கியுர்டெஸ்டி பகுதியைச் சேர்ந்த கியினா மிஹாய் என்ற 34 வயது பெண்ணே இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

'கையடக்கத்தொலைபேசியை எடுத்து பார்த்தபோது இறந்துபோன எனது பாட்டியின் புகைப்படம் ஒன்று இருந்தது. எனது பாட்டியே அந்த புகைப்படத்தை அனுப்பியிருந்தார். அதில் அவர் கல்லறையொன்றில் அமர்ந்திருப்பதுபோலவும் அவரைச்சுற்றி பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருப்பது போலவும் காணப்பட்டது. அவர் மறுஜென்ம வாழக்கையில் பல துன்பங்களை அனுபவிக்கின்றார் என்பதையே அந்த புகைப்படம் உணர்த்துகின்றது' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேவலாயத்தில் பெண்ணின்; பாட்டிக்காக பிரார்த்தணை கூட்டமொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .