2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

துண்டிக்கப்பட்ட தலையை ஏந்திய சிறுவன்: டுவிட்டரில் பரபரப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிரியாவின் இராணுவ வீரர் ஒருவரது துண்டிக்கப்பட்ட தலையை, ஏழு வயது சிறுவனொருவன் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படமொன்று டுவிட்டரில் வெளியாகி அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஜிஹாட் போராளியான காலீத் ஷெரோத் (வயது 33) என்பவரின் மகனது புகைப்படமே இவ்வாறு டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவர் யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியா பொலிஸாரினால் தீவிரமாக தேடப்படுபவர் என்று அந்நாட்டு ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட தனது மகனின் புகைப்படத்தில் 'இவன் என்னுடைய மகன்' என்று காலீத் ஷெரோத் தெரிவித்துள்ளார். இதேவேளை, துண்டிக்கப்பட்ட தலையை  கையில் பிடித்துக்கொண்டு    'என்ன ஒரு தலை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .