2025 மே 12, திங்கட்கிழமை

பாலூட்டும் தந்தை

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்தான் பாலூட்டுவார், ஆனால், தந்தையொருவர் தன்னுடைய குழந்தைகளுக்கு பாலூட்டும் சம்பவமொன்று பெலியத்த தம்முள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கு பாலூட்டும் நபருக்கும் அவருடைய மனைவிக்கும் 1997ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த ஏழு மாதங்களில் தாய், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான 10 நாட்கள் பயற்சிக்காக வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

அந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் இரவு, குழந்தை பசியால் அழுதுள்ளது. என்னசெய்வதென்று தெரியாமல், தந்தை தன்னுடைய மார்பகங்களுடன் அணைத்துகொண்டு தூங்கியுள்ளார். மார்பகத்தை உறிஞ்சியவாறு இருந்த குழந்தை சிறிது நேரத்தில் தூங்கிவிட்டது.

சற்றும் எதிர்பாராத குழந்தையின் தந்தை எழுந்து தன்னுடைய மார்பகத்தை பார்த்தபோது அதிலிருந்து பால் வடிந்திருப்தை அவதானித்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சிக்காக சென்றிருந்த குழந்தையின் தாய்க்கு வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது.  அவரும் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.

அவ்விருவருக்கும் தப்போது ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் தந்தை பாலூட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • m.musthak Monday, 15 September 2014 05:30 AM

    நம்ப முடியவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X