2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

குழந்தையுடன் உலாவரும் அபிநய தம்பதி

Gavitha   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


கார்ட்டூன் திரைப்படமொன்றில் நடித்து திருமணம் செய்து கொண்ட குள்ளத் தம்பதியினருக்கு தற்போது அழகிய குழந்தையொன்று பிறந்துள்ளது.

ஸ்னோவைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (Snow White and the Seven Dwarfs) கார்ட்டூணில் க்ரம்பி மற்றும் தொம்போ எனும் குள்ள இன  கதாபாத்திரத்தில் நடித்த ஜோடியே தற்போது கையில் குழந்தையுடன் வலம் வருகின்றனர்.

இவர்கள் ஸ்னோவைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் கார்ட்டூணில் வரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தவர்கள். நடிக்கும்போது இவர்கள் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது, குழந்தையை குழந்தை பராமரிப்பு நிலையமொன்றில் பராமரிப்புக்காக வைத்துவிட்டு, அபிநயநாடகங்களுக்காக மேடையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

'நான் முதல் முறையாக வைட்பீல்;டை கண்டபோது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரைப் போன்ற எவரையும் எனது வாழ்க்கையில் நான் சந்தித்ததில்லை. நான் கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது நானும் எனது குழந்தையும் சந்தோஷமாக இருக்கின்றோம்' என்று திருமதி வைட்பீல்ட் தெரிவித்துள்ளார்.


கதாப்பாத்திரம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X