Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Gavitha / 2015 மார்ச் 18 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு பொலித்தீன் பைகள் உதவியாக அமைகின்றன. சிலர், தாம் வாங்கும் பொருட்கள் மற்றையவர்களுக்கு தெரியக்கூடாது என எண்ணி, வௌ;வேறான பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதுண்டு.
இவ்வாறு பயன்பெறும் பொலித்தீன் பையை கொண்டு, தனது பெண் சிசுவை கடத்திச் சென்ற தந்தை தொடர்பில் கேளவிப்பட்டுள்ளீர்களா? ஆம், இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஜெசன் மத்தேயு பிரிஸ்டல், என்பவர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர். இவருக்கு பெண் சிசுவொன்று, அவரது வீட்டிலே பிறந்துள்ளது.
இந்நிலையில் சிசுவும் தாயும் பீனிக்ஸ், அரிசோனாவில் அமைந்துள்ள தண்டர்பேர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை போதை பொருளுக்கு அடிமையானவர் என்பதால் சிசுவும் பாதிப்புடனே பிறந்துள்ளது. இதனால், சிசுவை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது.
சிசுவை வைத்தியசாலையில் இருந்து எப்படியாவது வெளியில் கொண்டுவர வேண்டும் என மேற்படி நபர் எண்ணியுள்ளார். சிசுவை போர்வை ஒன்றினால் சுற்றி, பொலித்தீன் பையினுள் இட்டு அதனை வெளியில் கொண்டுவர முயற்சித்துள்ளார்.
எனினும் வைத்தியசாலையின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலிக்க ஆரம்பித்தவுடன் வைத்தியசாலை அதிகாரிகளிடம் தந்தை, கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்;.
சிசு பாதிப்புடன் பிறந்ததற்கும்; சிசுவை கடத்த முற்பட்ட காரணத்துக்காவும் மேற்படி நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 minute ago
24 minute ago
26 minute ago