2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

3 வயதில் 59 கிலோ எடையுள்ள சிறுவன்

Super User   / 2011 மார்ச் 23 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் 59nகிலோகிராம் எடையுடன்; காணப்படுகின்றான். இவனின் தோற்றம் பார்ப்பவர்களை மிரளச் செய்கிறது.

லூ ஹாவோ  என்ற இச்சிறுவனின் நிறையானது இச்சிறுவனின் வயதை ஒத்தவர்களின் எடையை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது.

இச்சிறுவனின் அசுர வேக வளர்ச்சியைக் கண்டு அவனது குடும்பத்தார் அச்சமடைந்துள்ளனர். அவனது எடையை குறைப்பதற்காக அவர்கள் பெரிய தட்டில் சோற்றையும் இறைச்சியையும் வழங்குவதை நிறுத்துவதற்கு அப்பெற்றோர் முயன்றனர். ஆனால் அம்முயற்சியை பின்னர் அவர்கள் கைவிட்டுவிட்டனர்.

இது குறித்து அவனது பெற்றோர்கள் தெரிவிக்கையில் 'அவனுக்கு நான்காவது, ஐந்தாவது தடவைகள் உணவு வழங்கப்படாவிட்டால் அவன்; கோபத்துடன் நடந்துக்கொள்வான்.
நாங்கள் அவனுக்கு உணவு வழங்குவதை நிறுத்திவிட்டால் அவன் அழுவதை நிறுத்தவே மாட்டான்' எனக் கூறியுள்ளனர். பெற்றோரின் உணவைவிட அதிகமாக உண்கிறான் இச்சிறுவன்.

கடந்த காலத்தில் அவனது உணவை குறைப்பதற்கு பெற்றோர் முயன்றுள்ளனர். ஆனாலும் கடந்த வருடம் அவனது எடை மேலும் 9 கிலோகிராம்களால்  அதிகரித்துள்ளது.

அவன் பாலர் பாடசாலைக்கு செல்வதும் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டுள்ளது. பாலர் பாடசலையில் இருக்கும் ஏனைய  சிறார்களுக்கு இவனது நிறை அச்சுறுத்தலாக அமையலாம் என்பதே இதற்குக் காரணம்.  அதனால் அவன் வீட்டில் தனிமையில் விளையாடுவதையே வழமையாக்கிக்கொண்டுள்ளான். அவன் சுவாசிப்பதற்கும் சிரமப்படுகிறான்.

கடந்த வருடம் அவனை காங    ;டொங்கில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதற்காக லூ ஹோய் மிகவும் வருத்தப்பட்டான்.

அவனது உடலில் ஹோர்மோன் கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் லூ ஹொங் கூறியுள்ளார்.

"இச்சிறுவனின் எடை மாத்திரம் அதிகமல்ல. அவனின் உயரமும் அதிகம். ஹோர்மோன் குறைபாட்டினால் இது ஏற்பட்டிருந்தால் சிகிச்சையளிக்கலாம். ஆனால் தொடர்ந்து இப்படியே வைத்திருப்பது இதயத்திற்கு ஆபத்தானது" என அவர் தெரிவித்துள்ளார்.


 


  Comments - 0

  • jaliyath Thursday, 24 March 2011 07:09 PM

    அல்லாஹ்வின் ஆற்றலில் ஆச்சரியம் உண்டா

    Reply : 0       0

    xlntgson Saturday, 26 March 2011 09:16 PM

    இதெல்லாம் தெய்வநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகவும் கருதலாம். அழகாக பிறந்தவர்கள் எல்லாம் இறைவன் தன்னை அழகாக படைத்தானே என்று மிகவும் நன்றியாக இருக்கின்றனரா?
    தன் அழகை வைத்துக்கொண்டு ஆணவமாக நடக்கும் ஆண் பெண்கள் அனந்தம் உண்டு. அழகை அழகல்ல என்று நிராகரிப்பவரும், அழகை வைத்துக்கொண்டு இருக்க, பொறாமையினால் அதை அமிலம் ஊற்றி அழிப்பவர்களுமாக மனிதர்கள் இறைவனை மறந்து குற்றம் புரிகின்றனர். பொய் கூறித்திரிகின்றனர். அன்பு, அழகு, செல்வம் எல்லாம் நிறைந்தவன், சம்பூர்ணமானவன் அவன் மட்டுமே! அவனுக்கே புகழனைத்தும் எல்லா ஸ்தோத்திரம்.

    Reply : 0       0

    Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 09:15 PM

    எம்மை படைத்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். (எம்மை அவன் இவ்வாறு ஆக்கவில்லையே)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X