Editorial / 2018 ஜூலை 18 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த, பவெல் செமினியூக் 346 பேரைக் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமையை பெற, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளார்.
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் பவெல் செமினியூக் (வயது 87), இவருக்கு 13 குழந்தைகள் பிறந்தனர். தற்போது இவருக்கு 127 பேரக்குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமன்றி 203 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். மேலும் அவரது கொள்ளுப் பேரப்பிள்ளைகளுக்கும் தற்போது 2 குழந்தைகள் பிறந்துள்ளன.
இவர்களுடன் அவரது குழந்தைகளையும் சேர்த்தால், அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 346 ஆகிறது. முன்னாள் கட்டுமானத் தொழிலாளியான செமினியூக், தனது பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் பெயர்கள் நினைவில் வைத்திருப்பது கடினமாக உள்ளது என்கிறார். தனது குடும்பத்தினர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை தனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, உலகின் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற கின்னஸ் சாதனைக்கு இவர் விண்ணப்பித்துள்ளார். தற்போது இந்தியர் ஒருவர் 192 பேருடன் உலகின் மிகப் பெரிய குடும்பம் தன்னுடையது என, கின்னஸ் சாதனையை தக்க வைத்துள்ளார்.
36 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago