2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

6 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடை விதிக்கும் உணவகம்

Kogilavani   / 2011 ஜூலை 14 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்களை அழைத்து வருவதற்கு வாடிக்கையாளர்களுக்கு தடை விதித்த உணவகமொன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின்  பென்சில்வேனியா மாநிலத்தில் மொன்றோவில் நகரில் அமைந்துள்ள மெக்டெய்ன்ஸ் என்ற உணவகமே இவ்வாறு 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்துவருவதற்கு தடை விதித்துள்ளது.

இவ்வுணவகம் சிறார்கள் சார்ந்ததல்ல என உணவகத்தின் உரிமையாளரான மைக் வுய்க் தெரிவித்துள்ளார். அவர்களின் சத்தங்கள் கட்டுப்படுத்த முடியாதவாறு உள்ளதென்பதே இதற்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளர்.

உணவகத்தின் இந்த கொள்கை மாற்றம் குறித்து உணவகத்தின் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

'மெக்டெய்னஸ் உணவகமானது இளம் சிறுவர்களுக்கான இடமல்ல என்று நாங்கள் உணர்கின்றோம். இங்கு அழைத்து வரும் குழந்தைகளின் சத்தத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் பல தடவைகள் மற்ற வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றனர'; என அம்மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'குழந்தைகளிடம் எந்த பிழையும் இல்லை. ஆனால், உண்மையில் அவர்களது சத்தத்தை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. சிறார்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  வேறு சில உணவகங்கள் இருக்கலாம்.  ஆனால்  அவ்வசதிகள் இங்கு இல்லை' என மைக் வுய்க் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து நகர மக்கள் மாறுபட்ட அபிப்பிராயங்களைத் தெரிவித்துள்ளனர்.

'இது உண்மையில் சிறந்த திட்டம் என நான் எண்ணுகிறேன்' என ஒருவர் கருத்து கூறியுள்ளார். மோசமான குழந்தை வளர்ப்பு யுகத்தில் நாம் வாழ்கின்றோமென அவர் மேலும் கூறியுள்ளர்.

எனினும் மற்றொவருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'உணவகங்களில் ஓடித்திரியும் குழந்தைகளைக் கட்டுப்படுத்த சத்தமிடும் பெற்றோரும் செல்லிடத் தொலைபேசியில் சத்தமிட்டு கதைப்பவர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது கொடுமையானது' எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X