2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆண்களின் கடவுளானார் எலோன் மஸ்க்

Ilango Bharathy   / 2023 மார்ச் 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக செல்வந்தர்கள் வரிசையில் முதலாம் இடத்தில் உள்ளவரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தைக்  கைப்பற்றியிருந்தார்.

 இந்நிலையில்பெங்களூரில் இயங்கிவரும் ஆண்களுக்காக நடத்தப்படும்  ‘சேவ் இந்தியா பேமிலி பவுண்டேஷன்‘ என்ற தனியார் அமைப்பைச் சேர்ந்த சிலர் எலோன் மஸ்க்கைக் கடவுளாக நினைத்து அவருக்கு பூஜைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ” எலோன் மஸ்க், பெண்ணியவாதிகளை அழிப்பவர் என்பதாலும், ஆண்கள் தங்கள் மனங்களில் நினைப்பதை சுதந்திரமாக பேச வழிவகை செய்தவர் என்பதாலும் அவரை கடவுளுக்கு நிகராக நினைத்து பூஜை செய்து வருகின்றோம்” என்றனர்.

இந்நிலையில் எலோன் மஸ்கிற்கு பூஜை செய்யப்படும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X