2025 மே 08, வியாழக்கிழமை

இணையத்தில் வாங்கப்பட்ட தோடால் வந்த வினை

Editorial   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்தில் மலிவான விலைக்கு இணையத்தின் வழி வாங்கப்பட்ட தோடால் 3 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யக்கூடும் என்று தாய் புலம்பியுள்ளார்.

அயர்லாந்தை சேர்ந்த அமெலியா என்ற 3 வயதுடைய சிறுமிக்கு, சமீபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட லேடி பேர்ட் வடிவிலான தோடு ஒன்று பரிசாக வந்துள்ளது. அனுப்பியவர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியப்படவில்லை. அதை அந்த நபர் இணையதளத்திலிருந்து வாங்கியுள்ளார்.

பார்ப்பதற்கு அழகாக இருந்தமையினால் அதனை குறித்த சிறுமியின் தாய் அமெலியாவின் காதுகளில் போட்டுவிட்டுள்ளார். எப்பொழுதும் இரவு வேளையில் அமெலியாவின் தோடை கழற்றிவிடும் தாயார், மகள் ஆசைப்பட்டதால் தோடை கழற்றாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் 3 தினங்களுக்கு பின்னர் மகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தோடை கழற்றிய வேளையில், காதில் இருந்து இரத்தம் வந்துள்ளது.

தோடை கழற்ற முற்பட்ட வேளையில் அமெலியா வலியால் துடித்தமையினால், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில், அமெலியாவின் காதுகளில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட அமெலியாவின் தாய் கூறுகையில், 'என் மகளின் இந்நிலைக்கு முக்கிய காரணம் அந்த தோடுகள் தான், இணையத்தில் பல பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கின்றனர். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அவற்றை உடனடியாக வாங்கிவிடுகின்றோம். அப்படி வாங்கப்பட்ட பொருளால் தான் என் மகள் காதுகளை இழக்கும் நிலையையடைந்தார்.” ஏன்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X