Editorial / 2018 ஜூலை 02 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இம்மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.
மேலும், கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும், இது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா கண்டங்களிலும் நியூஸிலாந்திலும் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா ஆர்டிக் - பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.
ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.
இந்த கிரகணம் ஜூலை 27ஆம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும், நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
34 minute ago
45 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago
59 minute ago
1 hours ago