2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இரட்டைச் சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த நபர்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர்,  ஒரே நேரத்தில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 பிங்கி,  ரிங்கி என்ற இரட்டைச் சகோதரிகள் மும்பையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வாழ்ந்து வந்ததால், ஒரே நபரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர் எனக்  கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த  ‘அதுல்‘என்பவரைக் காதலித்து வந்துள்ளனர்.  அதேசமயம் சகோதரிகளின் முடிவுக்கு குறித்த நபரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் அண்மையில் குறித்த நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் இச் சர்ச்சைக்குரிய திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதுதான். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X