2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

உலகின் மிகப் பெரிய ’ட்யூமர்’ கட்டி

Editorial   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த, சந்த்லால் பால் என்ற 31 வயதுடைய இளைஞனுக்கு, தலையில் மிகப் பெரிய ட்யூமர் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது.  இவரது தலையை விட கட்டி பெரிதாக இருந்தமையினால் சந்த்லால், அவருடைய கண் பார்வையையும் இழக்க வேண்டியதாயிற்று.

தலையில் வளர்ந்துள்ள இந்த கட்டியானது, 1.8 கிலோ எடையை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மும்பை மருத்துவமனையில், முன்னெடுக்கப்பட்ட 6 மணி நேர அறுவை சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக ட்யூமர் கட்டி அகற்றப்பட்டது. மேலும் இந்த ட்யூமர் கட்டியே உலகின் மிகப் பெரிய ட்யூமர் கட்டியாக இருக்க வேண்டும் எனவும்; மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சந்த்லால் இழந்த தனது பார்வையை திரும்ப பெற்றுகொள்ளவும் வாய்ப்புக்கள் உள்ளன என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X