2025 மே 08, வியாழக்கிழமை

ஐபேட்களில் விளையாடுவதால் தசை வளர்ச்சி குன்றும்

Editorial   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபேட் போன்ற கையடக்க சாதனங்களில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் விரல் தசைகளின் வளர்ச்சி, விரைவில் குன்ற ஆரம்பிக்கும் என, சமீபத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த குழந்தைகளால், நாளடைவில் ஒரு பென்சிலைக் கூட பிடிக்க முடியாமல் போகும் ஆபத்து ஏற்படலாமென்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பொம்மைகள் போன்ற விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பதனால், அவர்கள் அதுபோன்ற தொழில்நுட்ப சாதனங்களில் விளையாடுவதைத் தவிர்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

குறிப்பாக இன்றைய குழந்தைகள், ஐபேட் போன்ற கையடக்க சாதனங்களில் விளையாடுவதையே வழக்கமாக வைத்திருப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களே மூலகாரணம். அவர்கள் தம் குழந்தைகளின் நலத்தில், அக்கறை செலுத்தத் தவறும் பட்சத்தில், அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வது அதிகமாகின்றது. அதனால், தொடர்ந்து இதுபோன்று விளையாடும் குழந்தைகளுக்கு, நாளடைவில் பென்சிலை கூட வைத்திருக்க முடியாது. காரணம் அவர்களின் விரல் தசைகளின் வளர்ச்சி தடைபட்டிருக்கக் கூடும். ஆகவே இதுதொடர்பில் பெற்றோர் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X