Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெப்ரவரி 14 ஆம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் காதலர்கள், காதலை வெளிப்படுத்த பரிசு கொடுப்பது, சுற்றுலா செல்வது அல்லது இருவருக்கும் பிடித்ததை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவர். இது வழக்கமாக இருக்கும் நிலையில், ஒரு புதுவிதமான அறிவிப்பை அமெரிக்காவில் இருக்கும் ஒரு பூங்கா வெளியிட்டுள்ளது.
முன்னாள் காதலர் மீது இருக்கும் வன்மத்தை தீர்க்கும் வகையில் இந்த பூங்கா ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது இந்த பூங்காவில் இருக்கும் மடகாஸ்கர் என்னும் கரப்பான்பூச்சிக்கு முன்னாள் காதலரின் பெயரை வைக்கலாம்.
முன்னாள் காதலரின் பெயரை கரப்பான்பூச்சிக்கு வைப்பதன் மூலம் ஒருவர் அவர் மீது இருக்கும் வன்மத்தையும், உணர்ச்சிகளையும் வெளியேற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த புதுவிதமான அறிவிப்பை அமெரிக்காவில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக $15 அதாவது இலங்கை மதிப்பு படி ரூ. 4688 வசூலிக்கப்படுகிறது.
கரப்பான்பூச்சிக்கு முன்னாள் காதலரின் பெயரை வைக்க கட்டணம் செலுத்தி வைத்தால், முன்னாள் காதலருக்கு இமெயில் (EMAIL) மூலமாக கரப்பான்பூச்சி புகைப்படத்துடன் இந்த தகவல் அனுப்பப்படும்.
மேலும், கூடுதலாக $20 செலுத்தினால், கரப்பான்பூச்சி பொம்மை, மற்றும் கரப்பான்பூச்சியின் வடிவத்தில் பல பரிசுகளை முன்னாள் காதலர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலம், மக்கள் அவர்களது முன்னாள் காதலால் ஏற்பட்ட மன உளைச்சலை தீர்த்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .