Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
280 மாணவர்கள் இணைந்து பெண் மாணவியின் பிறந்த தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் சங்காய் மாகாணத்திலுள்ள மேர்ச்சன்ட் மெரின் பொறியியல் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண் மாணவர்கள் மட்டுமே இதுவரை காலமும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கல்லூரியின் வரலாற்றுக்கு மாறாக வூ சன் என்ற மாணவி பொறியியல் பீடத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டார். ஆனாலும் இவர் 280 ஆண் மாணவர்களின் வகுப்பிலே கல்வி கற்று வந்தார்.
தமது வகுப்பில் மாணவியொருவர் இணைந்து எவ்வித அச்சமுமின்றி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து செயற்பட்டு வருகின்றார் என்று உணர்ந்த ஏனைய ஆண் மாணவர்கள் அம்மாணவியுடன் நட்புபாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் அம்மாணவி தனது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். மாணவியின் பிறந்த தினத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஏனைய ஆண் மாணவர்கள், அம்மாணவியை வியப்பூட்ட வேண்டுமென்ற நோக்கில் கேக்கை ஓடர் செய்துள்ளனர்.
பிறந்த தினத்தன்று ஏனைய மாணவர்கள் அணிவகுத்து நிற்க இரண்டு ஆண் மாணவர்கள் மட்டும் கேக்கை கொண்டு வந்து மாணவியின் முன்னால் வைத்து வியப்பூட்டியுள்ளனர். பின்னர் அம்மாணவி கேக்கை அனைத்து மாணவர்களுக்கும் பங்கிட்டு வழங்கியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு துணிச்சல்மிக்க பெண்ணால் மட்டுமே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட முடியுமென பலர் கூறியுள்ளனர்.
இக்கல்லூரியில் எதிர்காலத்தில் பல பெண் மாணவிகள் இணைத்துக்கொள்ளப்படுவர் என தான் நம்புவதாக அம்மாணவி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago