Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 05 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞனை, பெண்கள் பலர் ஒன்றுகூடி, அடித்தே கொலைச் செய்த சம்பவமொன்று, இந்தியா ஜகர்காந் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜகர்காந், டம்கா பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்கு, குடும்பத்தாருடன் சென்றிருந்த சிறுமி, தனது நண்பிகளுடன் நீராடுவதற்காக ஆற்றுக்குச் சென்றுள்ளார்.
நண்பிகளுடன் நீராடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்ற குறித்த இளைஞன், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன், கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்துகொண்ட கிராமப் பெண்கள், இளைஞனை மடக்கிப் பிடித்து இளைஞனின் கைகளை துணியொன்றினால் கட்டியுள்ளதுடன், நிலத்தில் தள்ளிவீழ்த்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இளைஞனை மீட்டப்போதிலும், இளைஞன் உயிரிழந்துவிட்டான்.
இளைஞனின் சடலத்தை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியை இவ்விளைஞன்தான் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தானா என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கிராம பெண்கள் ஒன்றுகூடி இளைஞனை தாக்கும் காட்சிகளடங்கிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அக் காணொளியை இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago