2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தாய்ப் பாசம் வென்றது...

Princiya Dixci   / 2016 ஜூலை 03 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய் எலியொன்று, மூர்க்கத்தனமான ஒரு பாம்பிடிமிருந்து தனது குஞ்சைக் காப்பாற்றப் போராடி, அதில் வெற்றியும் கண்டுள்ளது.

பாதையோரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அவ்வழியால் சென்ற நபரொருவர், வீடியோவாகப் பதிவு செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் 'இன்று நான் வீடு திரும்பும் போது, ஓர் அம்மாவின் அற்புதச் செயலைக் கண்டேன்' எனப் பதிவேற்றியுள்ளார்.

அவ்வீடியோவில், எலிக்குஞ்சு ஒன்றை உணவாகக் கவ்விக்கொண்டு பாம்பு ஒன்று நகர்கின்றது. எனினும், அவ் எலிக்குஞ்சின் தாய் எலி, அந்தப் பாம்பின் வாலில் மிகவும் ஆக்ரோஷமாகக் கடித்து அதை விரட்டியடித்து, தனது குஞ்சை மீட்டெடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X