Freelancer / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த டைசுக் கோரி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ குறைந்தது 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தேவையான தூக்கத்தை நாம் தர மறுத்தால் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி கடுமையான தாக்கத்தை மனிதன் சந்திப்பான்.
ஆனால் ஜப்பானை சேர்ந்த டைசுக் கோரி என்பவர் ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டும்தான் உறங்குகிறாராம். இதை கடந்த 12 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறாராம்.
மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான அவர், தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துடன் சாதாரணமாகச் செயல்பட பயிற்சியளித்ததாகக் தெரிவிக்கிறார். மேலும் இந்த நடைமுறை தனது வேலை திறனை கணிசமாக மேம்படுத்தியதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் உடற்பயிற்சி அல்லது தேநீர் அருந்தினால், நீங்கள் தூக்கத்தைத் தடுக்கலாம்” எனத் தெரிவிக்கிறார்.S
6 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
15 Nov 2025