Gavitha / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாகத்துக்காக நீர் தேடி அலைந்து கொண்டிருந்த சிறுத்தையொன்றின் தலை, எதேற்சையாக பானையொன்றுக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம், ராஜஸ்தான், ராஜ்சமுந்த் எனும் பகுதியில் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
இராஜஸ்தானில் அமைந்துள்ள சர்துல் கேதா எனும் கிராமப்பகுதியிலேயே இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
இந்த சிறுத்தையின் தலை, சுமார் 3 மணித்தியாலங்களாக பானைக்குள் மாட்டிக்கொண்டிருந்ததாகவும் குறித்த பகுதியின் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பலர், புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக்கொண்டு விநோதமடைந்ததாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago