Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவரின் இடது கண்ணிலிருந்து, புழுக்கள் வெளியேறியதால் அந்தப் பெண் நிலைகுலைந்துச் சென்ற சம்பவமொன்று, அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த அபி பெக்லே (வயது 28) என்ற பெண்ணே இந்த விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார்.
கடற்றொழில் புரிந்துவரும் இவர், சில நாட்களாகவே தனது இடது புற கண் இலோசாக உறுத்துவதை உணர்ந்துள்ளார்.
ஒருவாரம் கடந்த நிலையில், அதே கண்ணில் அதிகப்படியான எரிச்சலை உணர்ந்த அவர், கண்ணை கையால் கசக்கியுள்ளார். அப்பொழுது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கண்ணைக் கசக்கிய அவர், தனது கையில் புழு இருப்பதைக் கண்டு நிலைத்தடுமாறினார். பெக்லேவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
தொடர்ந்து வந்த நாட்களில் சுமார் 6 புழுக்கள் வரை அவரது இடது கண்ணிலிருந்து வெளியேறியுள்ளன.
இதற்கு மேலும் தாமதித்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த அவர், ஓரிகன் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணரும் பேராசிரியருமான எரின் போனூராவுடன் தொடர்பை ஏற்படுத்தி, தன் பிரச்சினை குறித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, பெக்லேயின் கண்ணை பரிசோதித்த நிபுணர்கள், அதற்கான சரியான காரணத்தை அறியமுடியாமல் திண்டாடினர். கண்களில் புழுக்கள் இருப்பது மிகவும் அசாதாரணமானது என்று கூறிய அவர்கள், அதற்கான ஆய்வில் ஈடுபட்டனர்.
சுமார் 20 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர், பெக்லேயின் இடது கண்ணில் எஞ்சியிருந்த புழுக்கள் அனைத்தையும் வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.
மொத்தமாக அவரது இடது கண்ணிலிருந்து, 14 புழுக்கள் வெளியேற்றப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
51 minute ago
1 hours ago