Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 24 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
16 வயது பெண்ணுக்கு, மனநிலையே பாதிக்கப்படும் சூழல் வந்துவிட்டது. இதற்கு காரணமான டீச்சருக்கு சரியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த சம்பவம் இலண்டனில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்தே நடந்துள்ளது.. அந்த பாடசாலை மாணவிக்கு 16 வயதுதான் ஆகிறது. இவரிடம் தன்னுடைய பாலியல் வக்கிரத்தை அரங்கேற்றியிருக்கிறார் அதே பள்ளியின் ஆசிரியை இந்த ஆசிரியைக்கு 32 வயதாகிறது.
16 வயது : 16 வயது மாணவியை தன்னுடைய பாலியல் தேவைக்காக ஆசிரியை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இது ஆரம்பத்திலேயே, அந்த பாடசாலையில் உள்ளவர்களுக்கே தெரியவந்துள்ளது.. இறுதியில் பாடசாலை நிர்வாகம்வரை விஷயம் போயிருக்கிறது.. எனவே, பாடசாலை நிர்வாகமும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து, வார்னிங் தந்தது.
மற்றொருபக்கம் சிறுமியின் வீட்டிற்கும் தகவல் தந்து அலர்ட் செய்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், உடனடியாக தங்கள் மகளின் செல்போனை வாங்கி செக் செய்திருக்கிறார்கள்.. அப்போது, ஏராளமான ஆபாசமாக மெசேஜ்களை மாணவிக்கு, டீச்சர் அனுப்பியிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.
மெசேஜ்: உடனே இந்த மெசேஜ் ஆதாரங்களுடன் போலீசுக்கு ஓடினார்கள். சம்பந்தப்பட்ட டீச்சர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் தந்தனர். போலீசாரும், இதன்பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணையை ஆரம்பித்தது.
அப்போதுதான் ஆசிரியையின் காம லீலைகளை பார்த்து, பொலிஸாருக்கே தூக்கி வாரிப்போட்டுள்ளது. காதலர் தினத்தன்று, மாணவியை பள்ளியில் உள்ள பாத்ரூமுக்கு அழைத்து சென்று, தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியையை கட்டாயப்படுத்தினாராம். பல நேரங்களில் மாணவியின் அனுமதியின்றி முத்தம் தந்துவிடுவாராம்.
மன உளைச்சல்: ஆசிரியரின் இந்த விபரீதங்களை பார்த்து, அந்த மாணவியின் மனநிலை கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது.. நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்.. மாணவியால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. இனிமேல் ஸ்கூலுக்கு போகக்கூடாது, பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடலாம் என்றுகூட அந்த சிறுமி முடிவெடுத்துள்ளார்.
ஆசிரியையின் வீட்டிற்குள் பொலிஸார் நுழைந்தபோது, அதற்குமேல் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டனர். காரணம், ஆசிரியரின் வீடு முழுக்க போட்டோக்கள் இருந்துள்ளன.. அந்த மாணவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட 400 போட்டோக்களை சுவர்களில் ஒட்டிவைத்திருந்தாராம்.. அதில் சில போட்டோக்களில் ஆசிரியரும், மாணவியும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள்..
போட்டோக்கள்: இறுதியில், இந்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக்கொண்டு, பொலிஸார் நீதிமன்றத்துக்கு போனார்கள்.. ஆசிரியையும் நீதிமன்றத்துக்கு கொண்டுபோய் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து ஆதாரங்களையும் கண்டு கடும் ஆவேசமானார். தன்னுடைய சுயநலம், முட்டாள்தனத்தால், நம்பிக்கைக்குரிய தொழிலை களங்கப்படுத்திவிட்டார் என்று ஆசிரியைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு: இதனிடையே, சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமி மட்டுமல்லாமல், மேலும் 3 சிறுமிகளுக்கும் ஆசிரியை இதுபோலவே பாலியல் தொல்லை தந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவிகளும் பாலியல் குற்றச்சாட்டை ஆசிரியை மீது வைத்திருப்பதால், ஆசிரியர் தொழில் ஈடுபடுவதற்கு ஆசிரியைக்கு வாழ்நாள் தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தவிர, 2 வருட சிறை தண்டனையும் ஆசிரியைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு உடலுறவுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆசிரியைக்கு ஏற்கனவே 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி: ஆசிரியையின் இந்த சம்பவம் ஒட்டுமொத்த இங்கிலாந்திலும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. பாடசாலைகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி, மாணவ - மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பெற்றோர்கள் கோரிக்கையை விடுக்க துவங்கி உள்ளனர்.
தன் கேவலமான செயலால், மதிப்பிற்குரிய வேலையை இழந்து, பொதுவெளியில் அசிங்கப்பட்டு, 32 வயதிலேயே ஜெயிலுக்கும் போய்விட்டார் ஆசிரியை.
18 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago