Editorial / 2026 ஜனவரி 26 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சில வீடுகளில் பெண்களின் தலைமுடிகள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும், அதனை எடுத்து ஒரு பையில் போட்டு வைப்பது பெண்களுக்கு பெரும் வேலையாக இருக்கும்.
எனினும், மனைவியின் முடியால் விவாகரத்து கேட்ட கணவன் தொடர்பிலான செய்தி வெளியாகியுள்ளது.
மனைவிக்கு முடி கொட்டியதைக் காரணங்காட்டி கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 36 வயது லீ.
சரும நோய் காரணமாக அவருக்கு முடி கொட்டியது. அதனால் லீ வயதானவராகத் தோன்றினார்.
பொது இடத்தில் அவரைப் பார்த்த சிறுவர்கள் அவரைக் கேலி செய்தனர்.
குடும்பத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த லீக்கு வீட்டிலும் ஆதரவு இல்லை. நோய்வாய்ப்பட்ட பிறகு கணவர் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
அவர் லீயை விட்டுவிட்டு நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கச் சென்றார்.
லீக்கு உறுதுணையாக அவர் மருத்துவமனைக்குச் செல்லவில்லை; மருத்துவச் செலவுகளை ஏற்கவில்லை.
16 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்வு முறிந்ததாக லீ சொன்னார்.
விவாகரத்தை ஏற்றுக்கொண்ட அவர் கடந்தகாலத்தை விடுத்து மருத்துவச் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவிருப்பதாகக் கூறினார். அவரது கதை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
பலரும் அவருக்கு ஆறுதலாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
35 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
2 hours ago