Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜனவரி 09 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பதில் பலருக்கும் பல்வேறான ஆசைகள் இருக்கும். பணம்படைத்தவர்கள் விலையுர்ந்த நாய்களை கொள்வனவு செய்து வளர்ப்பர். இன்னும் சிலர், வீட்டுக்கு காவல்களுக்காக நாயை வளர்ப்பார்கள்.
எனினும், தொழிலதிபர் ஒருவர் இந்திய ரூபாய் மதிப்பில் 20 கோடி ரூபாய்க்கு ‘காகேசியன் ஷெப்பர்டு' என்ற இன நாயை கொள்வனவு செய்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவரே இந்த ‘காகேசியன் ஷெப்பர்டு' நாயை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக தொழிலதிபர் சதீஷ் உள்ளார். கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களுடன் பெங்களூருவில் 'கடபோம்ஸ் கென்னல்ஸ்' என்ற நாய் விற்பனை கடையையும் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘திபெத்தியன் மஸ்டிப்' இன நாயை ரூ.10 கோடி, ‘அலஸ்கன் மலமுடே' இன நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்' இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கினார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சதீஷ், ‘காகேசியன் ஷெப்பர்டு' இன நாயை ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
‘கடபோம் ஹைடர்' என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாய்க்கு ஒன்றரை வயது ஆகிறது. ‘காகேசியன் ஷெப்பர்டு' இனத்தை சேர்ந்த இந்த நாய் ரஷ்யா, துருக்கி, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழ கூடியது.
இதுகுறித்து சதீஷ் கூறும்போது, ‘‘திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் ‘கடபோம் ஹைடர்' நாய் கலந்துக் கொண்டு 32 பதக்கங்களை வென்றது. இந்த மாதம் இந்த நாயை அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பினேன். ஆனால் தலைமுடி கொட்டி வருவதால் அடுத்த மாதம் அறிமுகப்படுத்துவேன்'' என்றார்.
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025