2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

விகாரமான கைகளுடன் வாழும் இந்தியச் சிறுவன்

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப் பிரதேஷ் மாநிலத்தில் வாழும் விசித்திரமான சிறுவன் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாக பேசப்படுகின்றன.

டெரிக் (12) என்ற சிறுவனுக்கு, பிறந்தது முதல் இயற்கைக்கு மாறான வகையில் கைகள் வளர்ச்சியடைந்துள்ளன. அச்சிறுவனின் கைகள் சுமார் 12 அங்குல நீளத்துக்கு வளர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுளின் சாபம் காரணமாகவே இவ்வாறு விகாரமாக கைகள் வளர்ந்திருப்பதாக கிராமத்தவர்கள் நம்புகின்றனர். இதனால் அந்த சிறுவன் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறான். எனினும் கடவுளின் கிருபையால் தனது கைகள் சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை சிறுவனுக்கு உண்டு.

கைகள் விகாரமாக வளர்ந்திருக்கும் காரணத்தினால் சுயமாக எதுவும் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .