2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

விசித்திர திருமணம் செய்யும் பழங்குடியினர்

Mayu   / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லா நாடுகளிலும்  திருமணம் என்பது மிக முக்கியமானது. ஆனால் உலகம் முழுவதும் பல விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன. 

அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் உள்ளனர். இந்த பழங்குடியினரில் வாழ்பவர்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள்.  இந்த மரபு இந்த பழங்குடியினரின் அடையாளமாக கருதப்படுகிறது.

வோடபே பழங்குடியின மக்களின் முதல் திருமணம் குடும்பத்தின் விருப்பப்படி நடக்கிறதாம். இரண்டாவது திருமணத்தின் போது, ​​ அவர்கள் மற்ற மனைவிகளைத் தன்வசப்படுத்த வேண்டும்.

அவர்கள் பிறருடைய மனைவிகளை தன்வசப்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு மறுமணம்செய்ய உரிமை இல்லை.  அதனால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள ஒரே வழி இதுதான்.

இந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கரேவோல் திருவிழாவை நடத்துகிறார்கள். இந்த திருவிழாவின் போது பாரம்பரிய ஆடை அணிந்து முகத்திற்கு வண்ணம் தீட்டுவார்கள். இந்த குழு நிகழ்வின் போது, ​​இளைஞர்கள் மற்ற பெண்களின் இதயங்களை வெல்ல முயற்சி  செய்கிறார்கள்.

ஒருவரது மனைவி வேறொரு ஆணுடன் சென்றுவிட்டார், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்அவர்களுக்குத் திருமணம் செய்து  வைக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X