2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விண்ணில் செல்லவிருக்கும் லேசர் satellite

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாசா நிறுவனம் அடுத்த மாதமளவில் லேசர் செட்லைட் ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ICESat-2 எனும் குறித்த செட்லைட் ஆனது, விண்ணிலிருந்து பூமியிலுள்ள பனிப் படர்ந்த பிரதேசங்களைக் கண்காணிக்கும்.

இதனூடாக பனிப்படலங்கள், என்ன காரணங்களினால் விரைவாக உருகுகின்றன என்பதை கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி கலிபோர்னியாவிலுள்ள வென்டென்பேர்க் விமானப்படைத்தளத்திலிருந்து இந்த செட்லைட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

மேலும் ஒவ்வொரு செக்கனிற்கும் சுமார் 60,000 அளவீடுகளை எடுக்கும் திறன் இசந்த செட்டிலைட்டிற்கு இருக்கின்றமை விசேட அம்சமாகும். அண்மைக்காலமாக பனிப்பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்துச் செல்கின்றது. இதன் காரணமாகவே இவ்வாறானதொரு நடவடிக்கையில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளதென தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X