Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாழக்கிரகத்தின் நிலவான Io வில் பாரிய எரிமலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நாசா நிறுவனத்தின் யூனோ என்ற விண்கலமே இந்த எரிமலையை படம்பிடித்துள்ளது.
இவ் விண்கலமானது வியாழக்கிரகத்திலிருந்து 470,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்து Jovian InfraRed Auroral Mapper (JIRAM) எனும் கருவி மூலம் குறித்த எரிமலையைப் படம் பிடித்துள்ளது. எவ்வாறெனினும், Io நிலவில் எரிமலை கண்டுபிடிக்கப்படுவது இது முதன் முறை அல்ல.
சுமார் 150 வரையான செயற்படு நிலையிலுள்ள எரிமலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எரிமலையே மிகவும் வெப்பநிலைக் கூடியது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யூனோ விணக்லமானது 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .