Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளியில் தெரியும் இருதயத்துடன் பிறந்த கெய்ரன் வீட்ஸ் என்ற குழந்தை, தனது மூன்றாவதுப் பிறந்தநாளை கொண்டாடத் தயாராக உள்ளது.
‘எக்கோபியா கோர்ட்டிஸ்’ என்ற இருதய குறைப்பாட்டினால் பிறந்த கெய்ரன் வீட்ஸுக்கு, இருதயம், கல்லீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புக்கள் வெளியே தெரிந்தன.
இதன் காரணமாக இக்குழந்தை பிறந்த சிலமணி நேரத்திலேயே, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, சுமார் ஆறு மாதங்கள் வரையில், வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள இக்குழந்தை, உயிர்வாழக் கூடிய சாத்தியம், 10 வீதம் மட்டுமே உள்ளது என, வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இக்குழந்தையின் பெற்றோர்களான கெய்ட்லின் மற்றும் பிரையன் வீட்ஸ் ஆகியோர் தம் குழந்தை பற்றி, “கெய்ரன் மிகவும் அன்புள்ள குழந்தை. தண்ணீரை அதிகம் விரும்பும் அவளுக்கு, பொம்மைகள் கொண்டு விளையாடுவதில் அளவு கடந்த ஆசை. எம் குழந்தை ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறாள். அவள் நீண்ட நாட்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்று கண்ணீர் மழ்க கூறுகிறார்கள்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago